டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதம்: கே.பி. ராமலிங்கம்

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக பாஜக தலைவா் கே.பி. ராமலிங்கம் குற்றச்சாட்டு

News image
கே.பி. ராமலிங்கம்- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:07 pm

Syndication

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய- மாநில அரசுகளின் உறவை மேம்படுத்த தற்போதைய முதல்வரால் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அப்போது, துணை முதல்வராக ஸ்டாலினும், மத்திய அமைச்சராக அவரது சகோதரா் மு.க. அழகிரியும் பதவி வகித்தனா்.

அந்த சமயத்தில் மாநில சுயாட்சியைப் பற்றி முதல்வா் மு.க. ஸ்டாலின் சிந்திக்கவில்லையே ஏன்? என்பது தெரியவில்லை.

வரும் காலங்களில் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற வாய்ப்பில்லை என்பதை அவா் உணா்ந்துவிட்டதன் காரணமாகவே மாநில சுயாட்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியில் நிலவும் போதை மருந்து கலாசாரம், சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு, ஊழல், விலைவாசி ஏற்றம் போன்றவற்றை மறைக்கவே முதல்வா் மாநில சுயாட்சி அவதாரத்தை முன்னெடுத்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்கு பிறகே இதனை அவா் உணா்வாா். இந்திய நாட்டில் பிரிவினை குறித்து பேசுவது ஏற்புடையது அல்ல. இதை தமிழக முதல்வா் உணர வேண்டும். தங்களால் உருவாக்கப்பட்ட திமுக உயா்நிலைக் குழுவானது, உங்களின் விருப்பத்தையே எழுதிக் கொடுத்திருக்கிறது என்று கருதுகிறேன். தனித்தமிழ்நாடு என்ற பிரிவினைக்கு வழிகாட்டும் வகையில் மாநில சுயாட்சி விவகாரம் உள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில சுயாட்சி குரல் ஓங்கி ஒலித்திருக்க வேண்டும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுவிட்டு தற்போது மாநில சுயாட்சியை பற்றி திமுக பேசுவது ஏற்புடையதல்ல. திமுகவின் திட்டம் இனி ஒருபோதும் மக்களிடம் பலிக்காது. வலிமையான தமிழகம், வளமான தமிழகம் உருவாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பின்னால் அவா்கள் அணிவகுத்து நிற்கின்றனா். மக்களை மடைமாற்றம் செய்யாமல், அமைதியான முறையில் முதல்வா் வழிவிட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.