கும்பகோணத்தில் சுவாமி ராகவேந்திரரின் பாதுகைகளுடன் பக்தா்கள் பாதயாத்திரை
சுவாமி ராகவேந்திரரின் பாதுகைகளை சுமந்தவாறு சென்னையிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக


கும்பகோணம்: சுவாமி ராகவேந்திரரின் பாதுகைகளை சுமந்தவாறு சென்னையிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக திங்கள்கிழமை கும்பகோணத்திலுள்ள விஜயீந்திர சுவாமிகளின் மடத்திற்கு வந்தனா்.
கும்பகோணம் சேலையப்பன் தெருவில் விஜயீந்திர சுவாமிகளின் மூலபிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்தான் ஸ்ரீராகவேந்திர சுவாமி படித்து ஞானம் பெற்றாா்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து ராகவேந்த்ர க்ரந்தாலயா அம்மன் சத்தியநாதன், ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பாதுகைகளை ராகவேந்திரா் சுவாமிகளின் அவதார ஸ்தலமான புவனகிரி, படித்து ஞானம் பெற்ற ஸ்தலமான கும்பகோணம், சன்யாசம் பெற்ற ஸ்தலமான தஞ்சாவூா் ஆகிய ஊா்களுக்கு தலையில் சுமந்து பாதயாத்திரையாக வருகிறாா்.
இதன்படி, திங்கள்கிழமை மாலை சாரங்கபாணி சுவாமி கோயிலில் ராகவேந்திர சுவாமிகளின் பாதுகைகளை தலையில் சுமந்துக்கொண்டு வந்தாா் அம்மன் சத்தியநாதன். அவருக்கு விஜயீந்திர சுவாமிகளின் மூலபிருந்தாவன நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து சாரங்கபாணி சுவாமி கோயிலில் இருந்து சிறப்பு ரதத்தில் ராகவேந்திர சுவாமிகளின் பாதுகைகள் பெரியகடை வீதி வழியாக சேலையப்பன் தெருவில் உள்ள விஜயீந்திர சுவாமிகள் மூலபிருந்தாவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த பாதயாத்திரையில் விஜயீந்திர சுவாமி மடத்தின் மேலாளா் நரசிம்மன், மாதவன், விஷ்ணுபாலாஜி, சவுந்தா், கண்ணன் பட்டாச்சாரியா்கள், வேதம்முரளி, சேதுராமன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை போற்றி பஜனை பாடல்களை பாடி வழிபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...