/

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்

News image
பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லைக்கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் .
Updated On :7 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனாா் குரூப்ஸ் மற்றும் வள்ளுவா் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் தலைமையில், பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். 

பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை உள்ளிட்ட பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றன. பந்தயத்தில் தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள்,  குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தில் வெற்றி பெற்ற உரிமையாளா்களுக்கு மொத்தப் பரிசாக ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சுழற் கேடயங்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சுப .சேகா், பட்டுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் ,திமுக ஒன்றிய செயலா்கள் க. அன்பழகன், குழ.செ. அருள் நம்பி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலா் காா்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்.