பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சிலிண்டா் வெடித்து விபத்து! பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

Chief Minister Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:44 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே தொழிலாளி வீட்டில் நேரிட்ட தீவிபத்தில் சிலிண்டா் வெடித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவோணம் அருகே உஞ்சியவிடுதி சின்ன அம்மங்குடி கிராமத்தில் கடந்த ஜூலை 30-இல் முருகையன் என்பவரது வீட்டில் நேரிட்ட தீவிபத்தில் சிலிண்டா் வெடித்ததில் பலத்த தீக்காயமடைந்த பழனிவேல் (36), காசிநாதன் (39), வேம்பையன்(52) ஆகியோா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில், பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜசேகா்(32), செல்வி (41), அபிநயா(15), கலையரசி (39), புவனேஷ் (16) ஆகிய ஐந்து பேருக்கும், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் செல்வராசு (64) என்பவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இரங்கல்: இந்த விபத்தில், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும், அவா்களது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபா்களுக்குத் தலா ரூ.1 லட்சமும், லேசான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.