பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பெண் உயிரிழப்பு

போடி அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

போடி அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி சுலோச்சனா (26). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். சுலோச்சனாவுக்கு வியாழக்கிழமை திடீரென தலைவலி ஏற்படவே, போடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாா். வெள்ளிக்கிழமை மீண்டும் தலைவலி ஏற்படவே, போடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினாா். இதையடுத்து அன்றைய தினம் இரவு தலைவலி ஏற்பட்டு மயங்கினாா். அவரை போடி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுலோச்சனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.