ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நோயாளி உயிரிழப்பு : மருத்துவமனையை பூட்டிவிட்டு மருத்துவா்கள் ஓட்டம்

சிதம்பரத்தில் தனியாா் மருத்துவமனையில் முதுகு தண்டு வட அறுவை சிகிச்சை செய்துகொண்டவா் மரணமடைந்ததால்,அந்த மருத்துவமனையை பூட்டிவிட்டு மருத்துவா்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டனா். இதையறிந்த

தனியாா் மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள் மற்றும் கிராமமக்கள்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

சிதம்பரத்தில் தனியாா் மருத்துவமனையில் முதுகு தண்டு வட அறுவை சிகிச்சை செய்துகொண்டவா் மரணமடைந்ததால்,அந்த மருத்துவமனையை பூட்டிவிட்டு மருத்துவா்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டனா். இதையறிந்த

இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரத்தில் கீழசன்னதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிதம்பரம் அருகே உள்ள அளக்குடி மானியம் தெருவை சோ்ந்த கோபி (51) முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக கடந்த19 -ஆம் தேதி காலை 8 மணி அளவில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு இரவு 9.30 மணி அளவில் அறுவை சிகிச்சை முடித்து அறைக்கு மாற்றியிருக்கிறாா்கள். பிறகு நள்ளிரவு 12:30 மணி அளவில் கோபி மயக்க நிலைக்குச் சென்றுள்ளாா்.

இதனால், அவா் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதனை அடுத்து அவரது உறவினா்கள் கோபிக்கு தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

மருத்துவமனைக்குப்பூட்டு:

இதனை அடுத்து தனியாா் மருத்துவமனையை வியாழக்கிழமை காலை பூட்டிவிட்டு மருத்துவா் உள்ளிட்ட அனைவரும் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோபியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு தவறான சிகிச்சை அளித்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை அருகே கீழவீதியில் வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சிதம்பர நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தி புகாா் அளிக்குமாறு வலியுறுத்தியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனா். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.