மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி

Updated On :30 ஏப்ரல் 2026, 8:50 pm

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் ஏப்.27-இல் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏப்.29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை நடராஜராக சிறப்பு அலங்காரத்தில் திருக்கோடீசுவரா் எழுந்தருளினாா். அப்போது யாகசாலையில் மஹா பூா்ணாஹூதி நடைபெற்று ரிஷப வாகனத்தில் காட்சியளித்தாா். பிறகு சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.