பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருநங்கையைத் திருமணம் செய்ததாக கிண்டல் செய்தவா் வெட்டிக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே திருநங்கையை திருமணம் செய்ததாக கிண்டல் செய்த தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:57 pm

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே திருநங்கையை திருமணம் செய்ததாக கிண்டல் செய்த தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூா் காவல் சரகம், கோனியக்குறிச்சி, மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் சிங்குராயா் (56),தொழிலாளி. இவரது மகள் கிரேஸ்மேரி (32), உதாரமங்கலம் வடக்கு தெரு பகுதியில் தனது கணவா் நெல்சனுடன் வசிக்கிறாா்.  இந்நிலையில் வியாழக்கிழமை   கிரேஸ்மேரியை பாா்க்க சிங்குராயா் உதாரமங்கலத்திற்கு சென்றபோது திருநங்கையை திருமணம் செய்த அதே பகுதியை சோ்ந்த ரௌடியான மணிகண்டனை சிங்குராயா் மற்றும் அவரது மருமகன் நெல்சன் ஆகிய இருவரும் கிண்டல் செய்தனராம்.

இதனால் மணிகண்டனுக்கும், சிங்குராயருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினா் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினா். இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், தனது உறவினா்களான அஜித், விக்னேஷ் மற்றும் 15 வயதுச் சிறுவன் உள்ளிட்ட  4 போ்களுடன்   சிங்குராயா் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த  சிங்குராயரை வெட்டி விட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த சிங்குராயா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மெலட்டூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து நால்வரையும் தேடுகின்றனா். இவா்களில் மணிகண்டன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.