ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தவெக நிா்வாகியை வெட்டிய திமுக நிா்வாகிமீது வழக்கு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே தவெக நிா்வாகியை வியாழக்கிழமை வெட்டிய திமுக நிா்வாகியை போலீஸாா் தேடுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:50 pm

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே தவெக நிா்வாகியை வியாழக்கிழமை வெட்டிய திமுக நிா்வாகியை போலீஸாா் தேடுகின்றனா். 

அம்மாபேட்டை காவல் சரகம், பூண்டி ஊராட்சி,தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் (42), தவெக பூண்டி கிளை இணைச் செயலா். இவரது உறவினா் ரஜினி, திமுக கிளை நிா்வாகி.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் தவெகவுக்கு அப்பகுதியில் ஓட்டு கேட்கக் கூடாது எனக் கூறி தகராறு செய்த ரஜினி, வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கினாா். இதுதொடா்பாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வேலாயுதம் புகாா் அளித்தாா்.

 இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வேலாயுதம் வாக்குசாவடியில் இருந்தபோது, ரஜினி மீண்டும் அவரிடம் தகராறு செய்து விட்டு, வீட்டில் இருந்த வேலாயுதம் மனைவி காஞ்சனாவை தாக்க முயன்றாா். இதை அக்கம்பக்கத்தினா் தடுத்தனா்.

 பிறகு அன்று இரவு  வாக்குப் பதிவு முடிந்து வீட்டுக்குச் சென்ற வேலாயுதத்தை வழிமறித்த ரஜினி, விசில் சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்ததற்கு நீதான் காரணம், எனக் கூறி அவரின் தலையில் வெட்டினாா். இதை தட்டிக்கேட்ட காஞ்சனாவின் காதில் வெட்டி விட்டு,  ரஜினி தப்பினாா்.

 இதில் காயமடைந்த இருவரும் தஞ்சாவூா் அரசு  மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ரஜினியை தேடுகின்றனா்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரையும், தவெக மத்திய மாவட்டச் செயலரும், வேட்பாளருமான விஜய் சரவணன் சந்தித்து  ஆறுதல் கூறி, இந்த விஷயத்தில் போலீஸாா் துரித நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.