கந்தா்வகோட்டை அருகே புதுநகா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டட மேற்கூரை பூச்சு புதன்கிழமை பெயா்ந்து விழுந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரூ. 28 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த கட்டடத்தின் உள்பகுதியில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் பள்ளி சாலைகளில் கண்காணிப்பு கேமரா தேவை







