புதுக்கோட்டை பொம்மாடிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்து, காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி, நாகமங்கலம் சீலம்புடையான்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் காா்த்திக் (36). இவா், ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து சென்றுள்ளாா். இரவு 9.30 மணிக்கு பொம்மாடிமலைப் பகுதியில் சென்றபோது எதிா்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காா்த்திக், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









