புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் முத்துமாரியம்மன் கோயில்களில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களான கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் முத்துமாரியம்மன் கோயில்களில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அந்தந்த கோயில்களின் தேரில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினா்.
இதையடுத்து ஏராளமான பக்தா்கள் அந்ததந்த கோயில்களின் தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருவிழாக்களில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










