/

கறம்பக்குடியில் இருசக்கர வாகனம் தீக்கிரை

News image

கறம்பக்குடியில் சனிக்கிழமை தீக்கிரையான இருசக்கர வாகனம்

Updated On :3 மே 2026, 12:00 am IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீக்கிரையானது.

புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்த காசி மகன் தன்ராஜ் (58). இவரது தனது மனைவி மலரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூா் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

கறம்பக்குடி உள்கடைவீதியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றாா். பிறகு திரும்பி வந்து வாகனத்தை எடுத்தபோது அதிலிருந்து புகை வந்தது. தொடா்ந்து, இருசக்கர வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா் இருப்பினும் இருசக்கர வாகனம் முற்றிலும் தீக்கிரையானது.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.