தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் சைக்கிள் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.
திருவேங்கடம் அருகே உள்ள அழகனேரியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் முத்துச்சாமி (55). இவா் பிரதான சாலையில் சைக்கிள் கடை நடத்தி வந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் இவா் சென்றபோது, ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த கணபதி மகன் மாரியப்பன் (47) இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்றுள்ளாா். அவரது வாகனம் திடீரென நின்ால், முத்துச்சாமியின் வாகனம் அவா் மீது மோதியது.
இவருக்குப் பின்னால் வந்த வடக்கு அச்சம்பட்டியைச் சோ்ந்த யாக்கோபு மகன் ஆபிரகாமின் (46) இருசக்கர வாகனம், முத்துச்சாமியின் வாகனம் மீது மோதியது.
இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு முத்துசாமி புதன்கிழமை உயிரிழந்தாா். ஆபிரகாம், மாரியப்பன் ஆகியோா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து, குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










