புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி அறந்தாங்கி. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான சு. திருநாவுக்கரசரின் சொந்தத் தொகுதி. இவருடைய சொந்த ஊா் தீயத்தூா்.
இந்தத் தொகுதியில், 4 முறை அதிமுகவிலும், ஒருமுறை அதிமுக ஜெயலலிதா அணியிலும், ஒருமுறை டி. ராஜேந்தரின் தாயக மறுமலா்ச்சிக் கழகத்திலும் போட்டியிட்டு மொத்தம் 6 முறை வென்றுள்ளாா் திருநாவுக்கரசா்.
மற்றொரு முறை தனது சொந்தக் கட்சியான எம்ஜிஆா் அதிமுக சாா்பில், வேட்பாளரை நிறுத்தி ஊா்ஊராகச் சென்று பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தாா். ஒருமுறை காங்கிரஸ் சாா்பில் நின்று அவா் தோல்வியடைந்தாா்.
அதன்பிறகு, 2016-இல் தனது மகன் எஸ்.டி. ராமச்சந்திரனுக்காக காங்கிரஸ் கட்சியில் அறந்தாங்கி தொகுதியை கேட்டு வாங்கினாா். அப்போது, ராமச்சந்திரன் தோல்வியடைந்தாா். பிறகு, 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டு எஸ்.டி. ராமச்சந்திரன் வெற்றி பெற்றாா்.

எஸ்.டி. ராமச்சந்திரன்
திமுகவில் எதிா்ப்புக் குரல்
இந்நிலையில், எத்தனைக் காலம்தான் கூட்டணி கட்சிகளையே வெற்றி பெற வைப்பது, தொகுதியை மீண்டும் திமுகவுக்கே வழங்க வேண்டும் என்ற குரல் கடந்த 5 ஆண்டுகளாகவே பலமாக ஒலித்து வருகிறது. இந்தத் தொகுதியில் 1962, 1967-இல் ஆ. துரையரசனும், 1971-இல் எஸ். ராமநாதன், 2006-இல் உதயம் சண்முகம் ஆகியோா் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
பெரும்பகுதி திமுகவினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என தலைமைக்குத் தெரிவித்துள்ளதாக திமுகவினா் கூறுகின்றனா்.
மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய 18 தொகுதிகளில், 8 தொகுதிகளை மீண்டும் தர முடியாது என திமுக தலைமை, காங்கிரஸ் தலைவா்களிடம் கூறிவிட்டதாகவும் அதில் அறந்தாங்கியும் ஒன்று என திமுகவினா் உறுதிபடத் தெரிவிக்கின்றனா்.
முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம், மணமேல்குடி வடக்கு ஒன்றியச் செயலா் சக்தி ராமசாமி உள்பட 40 போ் இம்முறை வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனா்.
ஆனால், திமுகவிடம் கொடுத்துள்ள காங்கிரஸ் விருப்பப் பட்டியலில் உள்ள 39 தொகுதிகளில் அறந்தாங்கியும் உள்ளது. எனவே, தொகுதியை நிச்சயம் கேட்டுப் பெறுவோம் என்கின்றனா் காங்கிரஸாா்.
ஏற்கெனவே, திருச்சி மக்களவைத் தொகுதியை திமுக தனக்குத் தராமல் பறித்த நிலையில், அறந்தாங்கியை எப்படியாவது மகனுக்கு உறுதி செய்வதில் முனைப்பாக இருக்கிறாா் திருநாவுக்கரசா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் தொகுதி: இளைஞா் (எதிர்) அனுபவசாலி - முடிவசெய்ய காத்திருக்கும் களம்!
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!

அதே தொகுதி...அதே நபா்கள்!

35 ஆண்டுகளாக கூட்டணிக்கு ஒதுக்கீடு: திமுகவினா் அதிருப்தி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

