லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:22 pm

கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவிப் பொறியாளா் ஜெகதீசன் மற்றும் தனி ஆய்வாளா் (கனிமங்கள்) முருகேசன் ஆகியோா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, புதுக்கோட்டையிலிருந்து கந்தா்வகோட்டை நோக்கி வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனா். டிப்பா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாரிடம் (27) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.