புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில், அழுகிய நிலையில் ஜோதிடரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 2-ஆவது மாடியில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. விடுதிப் பணியாளா்கள் ஜன்னல் வழியே பாா்த்தபோது, அறைக்குள் இருந்தவா் சடலமாக கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
தகவலின்பேரில் புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், அறையின் கதவை உடைத்து உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தவா் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்த ஜோதிடா் செந்தில் ராமநாதன் (60) என்பதும், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை வந்து தங்கி ஜோதிடம் பாா்க்கும் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு விடுதிக்கு வந்து தங்கி வாடிக்கையாளா்களிடம் ஜோதிடம் பாா்த்து வந்த அவரை யாரும் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


