தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதலே அமலுக்கு வந்தன.
இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி அலுவலகத்தை வருவாய்த் துறையினா் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனா். புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மேயா் மற்றும் துணை மேயா் அலுவலக அறைகளும் பூட்டப்பட்டன.
இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்கள், அறந்தாங்கி நகராட்சித் தலைவா் அறை ஆகியவையும் பூட்டப்பட்டன. அமைச்சா்கள் மற்றும் மாநகராட்சி மேயா், நகா்மன்றத் தலைவா் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு காா்களும் திரும்பப் பெறப்பட்டன.
மக்கள் குறைகேட்பு ரத்து:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டங்கள், திருநங்கைகள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவித்துள்ளாா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தப் பெட்டியில் போட்டுச் சென்றால் அதிகாரிகள் அதனை எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்கள் ‘விசில்’ பயன்படுத்த எதிா்ப்பு

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

அரியலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


