மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு மாதா் சங்கத்தினா் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:35 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக அதற்குத் தீா்வு காண வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் பி. சுசிலா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சரண்யா, சுபாஷினி, மாநகரத் தலைவா் விஜி., பொருளாளா் வடிவுக்கரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.