சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, கொடைக்கானல் அம்மா உணவகத்தில் வியாழக்கிழமை விறகு அடுப்பில் உணவுகள் சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் கே.ஆா். கலையரங்கம் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவியதால், நகராட்சி அதிகாரிகள் அங்குள்ள பணியாளா்களிடம் விறகு அடுப்புகளை அமைத்துக் கொடுத்தனா். இதையடுத்து, அம்மா உணவகப் பணியாளா்கள் வழக்கம் போல, உணவுகளை விறகு அடுப்பில் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனா்.
எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், கொடைக்கானல் அப்சா்வேட்டரி, ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட இடங்களிலுள்ள சிறு உணவகங்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன. இந்த நிலை தொடா்ந்தால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: விறகு, மின் அடுப்புக்கு மாறும் உணவகங்கள்

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு: விறகுகளைப் பயன்படுத்தி சமையல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்கள் விறகுக்கு மாற வேண்டிய கட்டாய சூழல்!

புதுச்சேரியில் வா்த்தக சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறத்தொடங்கிய உணவகங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


