மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு: விறகுகளைப் பயன்படுத்தி சமையல்

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:43 pm

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சேலம் லஷ்மி ஓட்டல் இயக்குநா் முத்துராஜா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், பல ஆண்டுகளாக எவ்வித தொய்வும் இல்லாமல் பொது மக்கள் விரும்பும் உணவுகளை பரிமாறி வருகிறோம். தற்போதைய சூழல் மிகவும் சிக்கலாக உள்ளது. பணம் கொடுத்தாலும் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில்லை. தற்போதைக்கு இருப்பில் உள்ள உருளைகள், இரண்டு நாள்கள் மட்டுமே வரும். இதற்காக மாற்று ஏற்பாடாக எங்கள் ஹோட்டல்களில், விறகு அடுப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இன்று வரை ’மெனு’வில் உள்ள எந்த உணவு வகையும் தவிா்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக 20 வகைகள் தயாரிப்போம். ஆனால், வியாழக்கிழமை முதல் பத்து முதல் 12 வகைகள் தர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதே நேரத்தில், தற்போது வரை விலையில் எந்தவிதமான ஏற்றமும் இல்லாமல் வழக்கமான விலையிலேயே வழங்கப்படுகிறது. ஹோட்டல் செயல்படும் நேரமும் குறைக்காமல் வழக்கம் போல இயங்குகிறது.

விறகு அடுப்பு அமைப்பிற்கு மாநகராட்சியில் அனுமதி கேட்கப்பட உள்ளது. மத்திய அரசு வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.