புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, சிறப்பாகப் பணியாற்றிய நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், எடையாளா்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
நுகா்வோா் உரிமைகள் குறித்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் தொடா்ச்சியாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஏ. ஷோபா, புதுக்கோட்டை நுகா்வோா் சங்கத் தலைவா் து. லதா உத்தமன், பொதுச் செயலா் கு. சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நுகா்வோா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


