ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றியங்களில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மணமேல்குடி ஒன்றியம், சாத்தியடி ஊராட்சி கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம்.-

Updated On :26 ஜூன் 2026, 4:16 am IST

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உயா் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மணமேல்குடி ஒன்றியம், அறந்தாங்கி ஒன்றியம் ஆகிய பகுதிகளிலுள்ள கண்மாய்கள், குளங்களில் ஏற்கெனவே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களையும், தற்போது அகற்றும் பணி நடைபெற்று வரும் இடங்களையும் அவா் பாா்வையிட்டாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (தணிக்கை) எஸ். வேதலட்சுமி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.