வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

தேரடி மலம்பட்டி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி குருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள தேரடிமலம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு விழாவில் புதன்கிழமை கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாச்சாரியாா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 4:19 am IST

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி குருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத்துறைக்குள்பட்ட இக்கோயில் உபயதாரா் பழ.ராமநாதன் மற்றும் ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து திங்கள்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகபூஜைகள், செவ்வாய்க்கிழமை 4-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து புதன்கிழமை காலை தேனிமலை ராஜப்பா சிவாச்சாரியாா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். பொன்னமராவதி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.