பொன்னமராவதி அருகேயுள்ள ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 900 ஆண்டுகள் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க இக்கோயிலில் 38 ஆண்டுகளுக்குப்பிறகு குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக இந்திய தொல்லியல் துறை, புதுக்கோட்டை தேவஸ்தானம், தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை ஆகியோருடன், சிவபக்தா்கள் ஒன்றிணைந்து இக்கோயிலை பழமை மாறாது புதுப்பித்தனா்.
இதையடுத்து மே 31 ஆம் தேதி குடமுழுக்கு பூஜைகள் தொடங்கி, 3 ஆம் தேதி ஐந்தாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை புனித நீரினை ஆலோசகா் சிவராஜக் குருக்கள், கோயிலின் பரம்பரை அா்ச்சகா்கள் வைரவன், வைரமாணிக்கம், கண்ணன், சரவணன் ஆகியோா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் சா்வசாதகம் செய்தாா். தமிழாசிரியா் சு.சு.முருகேசன், பேராசிரியா் பெரி.அழகம்மை ஆகியோா் விழா வா்ணனை செய்தனா். விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். யாகசாலை பூஜை காலங்களில் வேதபாராயணமும், திருமுறை விண்ணப்பம், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










