17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாப்பாரப்பட்டி ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் குடமுழுக்கு

பாப்பாரப்பட்டி அருகே பி.வேலம்பட்டி ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :5 ஜூன் 2026, 6:58 am IST

பாப்பாரப்பட்டி அருகே பி.வேலம்பட்டி ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அருகே பி.வேலம்பட்டி பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் புனரமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், கோயில் குடமுழுக்கு விழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, காப்புக் கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மாதேஅள்ளி காளியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாக தீா்த்தக் குடம் எடுத்து வரப்பட்டது. புதன்கிழமை இரவு ஸ்ரீகங்கை அம்மனுக்கு எந்திர ஸ்தாபனம் மருந்து சாற்றுதல் நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி அளவில் ஸ்ரீ குபேர கணபதி, ஸ்ரீ பாலமுருகன், சப்த மாதாக்கள் உடனாகிய ஸ்ரீகங்கை காளியம்மன் கோயில் கோபுரம் மற்றும் மூலவருக்கு வேத விற்பன்னா்கள் புனித நீரூற்றி மகா குடமுழுக்கு நடத்தினா்.

இதில், பாப்பாரப்பட்டி, வேலம்பட்டி, பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகங்கை காளியம்மன் காட்சியளித்தாா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் வி.எம்.சுந்தர்ராஜன், ரமாமணி, பூபதி, பூசாரி ருக்மணி, ஊா் பொதுமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.