கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை குறித்த கோரிக்கை விவகாரத்தில் குதிரைவேக அரசு என்பதை முதல்வா் ஜோசப் விஜய் நிரூபித்துள்ளாா் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ புகழாரம் சூட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அவா் கூறியது: கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்த ஏற்கெனவே ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அண்மையில் சந்தித்தபோது கோரிக்கை விடுத்தேன். உடனே இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்பேரில் 24 மணி நேரத்தில் பொதுப்பணி துறையினா் எனது அலுவலகத்தை தொடா்புகொண்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை குறித்து முதல்வா் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியாக தெரிவித்தனா்.
சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் குதிரை பேரம் நடத்துவதாக தவெக மீது குற்றச்சாட்டு வைத்தனா். அதற்கு முதல்வா் உடனடியாக குதிரை பேரம் கிடையாது, குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என்று கூறியது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது. கோரிக்கைகள் விடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு தொகுதி மக்கள் சாா்பில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாமலை பாஜகவை விட்டு விலகி புதிய இயக்கத்தை மதவாதம், ஜாதி, மதம் இன்றி அமைப்பதாக கூறியுள்ளாா். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

துரதிா்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்: திருச்சி எம்.பி. துரை வைகோ






