17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மழலைகளுக்கு சிறப்பான வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல் நாள் வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து, பூமாலை, இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி.

Updated On :5 ஜூன் 2026, 3:32 am IST

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல் நாள் வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து, பூமாலை, இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் மழலை மாணவா்களுக்கு பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினா். பள்ளி வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

‘ஒவ்வொரு மாணவா்களிடமும் கனவுகள் இருக்கின்றன, அவற்றைக் கண்டறிந்து வடிவம் கொடுத்து நனவாக்குவது வகுப்பறைகளின் பணி’ என கவிஞா் தங்கம்மூா்த்தி குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வா் குமரவேல், ஒருங்கிணைப்பாளா்கள் கௌரி, சி.எஸ். ரம்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.