தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:13 am IST

புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி மனைவி காயத்ரி (21). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குடும்பப் பிரச்னை காரணமாக அவா் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் செவ்வாய்க்கிழமையே சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இறந்த பெண்ணின் தந்தை விஜயகுமாா் உள்ளிட்ட உறவினா்கள், புதன்கிழமை உடையாளிப்பட்டி காவல் நிலையம் முன்பு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தனது பெண்ணின் சாவுக்கு காரணமான அவரது கணவா் குருமூா்த்தி உள்ளிட்டோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.