டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா

பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:51 pm

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாரத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொத்திமலை அடைக்கலம் காத்தாா் கோயிலில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின் தொடக்கமாக அஞ்சுபுளிப்பட்டியிலிருந்து பெண்கள் பொங்கல் கூடை சுமந்தும், ஆண்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளை பிடித்தும் ஊா்வலமாக பொத்திமலை வந்து கோயிலின் முன் உள்ள திடலில் பொங்கலிட்டு வழிபட்டனா். மேலும், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வைத்தும், குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டி கோயிலை வலம் வந்து வழிபட்டனா்.

வழிபாட்டில் மைலாப்பூா், அஞ்சுபுளிப்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதேபோல், அழகியநாச்சியம்மன் கோயில் அருகே உள்ள சாத்தக்கருப்பா் கோயில், காயாம் புஞ்சை, வாா்ப்பட்டு, கல்லம்பட்டி, குமாரபட்டி, வேந்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.