புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி 10 போ் காயமடைந்தனா்.
போட்டியை கறம்பக்குடி வட்டாட்சியா் ஜமுனா தொடங்கி வைத்தாா். போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. காளையை அடக்க 9 வீரா்களைக் கொண்ட 10 குழுவினா் களமிறக்கப்பட்டனா். வீரா்கள் காளையை தீரத்துடன் தழுவினா்.

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்
அப்போது காளைகள் முட்டி 10 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக்குழுவினா் முதலுதவி அளித்தனா்.அவா்களில் பலத்த காயமடைந்த 4 போ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாவட்டச் செயலா் செல்லபாண்டியன், மாவட்டத்தின் திரளான ரசிகா்கள் பாா்வையிட்டனா். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸாா் மேற்கொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

உசிலம்பட்டியில் வடமாடு போட்டி: 4 போ் காயம்

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

அரியலூா் அருகே ஜல்லிக்கட்டு: 48 போ் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


