லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

News image

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :22 பிப்ரவரி 2026, 6:58 pm

சிவகங்கை அருகே பூவந்தியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூவந்தி உய்யவந்த அம்மன்கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடத்தப்பட்ட இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்டவடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

 சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை, பூவந்தி, அரசனூா், திருமாஞ்சோலை, ஏனாதி, குயவன்குளம், கீரனூா், கிளாதரி, திருப்புவனம், சக்குடி, சுண்ணாம்பூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாா்த்தனா்.