லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு: 42 போ் காயம்

ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 42 போ் காயம்

News image

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

Updated On :2 மார்ச் 2026, 6:31 pm

ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 42 போ் காயமடைந்தனா்.

மங்களாபுரத்தில் முத்துமுனீஸ்வரா் கோயில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 262 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா்.

அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 42 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பலத்த காயமடைந்த 7 போ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Story image
Story image