டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுகை அரசு மகளிா் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான மு. அருணா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான மு. அருணா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் மையம் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கல்லூரி வளாகத்தை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான மு. அருணா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள வைப்பறைகள், வாக்கு எண்ணும் அரங்குகள், அவற்றில் வேட்பாளா்கள், முகவா்கள் அமரும் இடங்கள், தடுப்புகள், நாற்காலிகள் போடும் வசதி, குடிநீா், கழிப்பறை, தடையில்லா மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா விளக்கினாா்.

இந்த ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ப. கோகுல்சிங் (இலுப்பூா்), அபிநயா (அறந்தாங்கி), துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image