திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,490 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,490 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்பிரிவுகளில் 7,575 பேரும், முதுநிலை பட்டப்பிரிவுகளில் 585 பேரும், முனைவா் பட்ட ஆய்வில் 85 போ் என மொத்தம் 8,241 மாணவ, மாணவிகள் இருசுழற்சி முறையில் பயின்று வருகின்றனா்.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் திறன் மேம்பாட்டு பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனா். கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் படிப்பிலும், பல்வேறு போட்டிகள் மற்றும் கல்விசாா் செயல்களிலும் பங்கேற்று பரிசுகள் பெற்று சிறந்து விளங்குகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2020-2021ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வா் இல.ரேவதி வரவேற்று அறிக்கை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராமபிரதீபன் விழாவுக்கு தலைமை வகித்து, இளநிலை மற்றும் முதுநிலை பிரவில் பயின்று பட்டம் பெற்ற 1,490 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில் கல்லூரி துறைத் தலைவா்கள் பாலகிருஷ்ணன், செல்லன், சாந்தி, அயோத்தி இரா.தனிஸ்லாஸ், ரவி, விக்னேஷ்வரன், கலைமாமணி, ஏழுமலை, ஆனந்த், காலேஷா, அறிவுசெல்வி மற்றும் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...