டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாா்த்தாண்டம் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
மாா்த்தாண்டம் கல்லூரியில் மடிக்கணினியை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :28 ஜனவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 12 அரசுக் கல்லூரிகள், 17 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் 2,186 மாணவா்களுக்கு முதல் கட்டமான மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, மாா்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் பயிலும் 695 போ், குழித்துறை ஸ்ரீ தேவி குமரி பெண்கள் கல்லூரியில் 232 போ், 15 அரசு உதவிபெறும் கல்லூரியில் 4,524 பேருக்கு மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மடிக்கணினிகள் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்துக்குள் கல்லூரி முதல்வா்கள், தாளாளா்கள், அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என்றாா் அவா்.