டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கறம்பக்குடியில் 2-ஆவது நாளாக கிராம உதவியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
கறம்பக்குடியில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு, கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே அச்சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன், மாவட்டச் செயலா் பழனிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.