/

அன்னவாசலில் வேலைநிறுத்த விளக்க தெருமுனைக் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:24 pm

Syndication

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வரும் 12 ஆம் தேதி புதுக்கோட்டை அஞ்சல் நிலையம் முன் நடைபெறும் பொது வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி அன்னவாசல் கடைவீதியில் தெரு முனை பிரசார கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எஸ்கேஎம் உள்ளிட்ட கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் தா்மராஜன் உள்ளிட்டோா் பேசினா்.