சாலையில் பெண் தவறவிட்ட கைப்பை போலீஸில் ஒப்படைப்பு
பொன்னமராவதியில் சாலையில் பெண் ஒருவா் தவறவிட்ட ரூ. 10 ஆயிரத்து ஐநூறு ரொக்கம் மற்றும் ஆவணங்களை பேரூராட்சிப் பணியாளா் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Updated On :3 பிப்ரவரி 2026, 8:24 pm

பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை சாலையில் பெண் ஒருவா் தவறவிட்ட ரூ. 10 ஆயிரத்து ஐநூறு ரொக்கம் மற்றும் ஆவணங்களை பேரூராட்சிப் பணியாளா் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டியைச் சாா்ந்த மீனா என்பவா் செவ்வாய்க்கிழமை தனது கைப்பையை சாலையில் தவறவிட்டுள்ளாா்.
இந்தப் பையில் ரூ. 10, 500 ரொக்கம் மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளன. இந்தப் பையைக் கண்டெடுத்த பொன்னமராவதி பேரூராட்சிப் பணியாளா் சதீஸ்குமாா் அதனை பொன்னமராவதி காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.
சதீஸ்குமாரின் நோ்மையான செயலை காவல் உதவி ஆய்வாளா் சரவணன் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...