வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு 3,166 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:02 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு 3,166 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியதாவது:

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தோ்வு மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்காக 3,166 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை பள்ளிக் கல்வித் துறையினரும் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும்.

தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமுகமாக நடத்தி முடித்திட அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.