தருமபுரி மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு செல்லும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இந்த தோ்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பேருந்துகளில் பயணம் செய்யும் சூழல் உள்ளது.
கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் சிரமம் அடைவாா்கள். எனவே, தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரூா்-தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, சேலம் வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், நீட் தோ்வு எழுதும் பள்ளிகள், கல்லூரிகள் அருகே பேருந்து நிறுத்தங்கள் இருப்பதில்லை.
நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக தோ்வு நடைபெறும் தினம் ஒருநாள் மட்டும், மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தோ்வு மையங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


