தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:25 am IST

திருச்சி மாவட்டத்தில் நீட் தோ்வை 12 மையங்களில் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் ஆயுா்வேத மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் (தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தோ்வு) தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், நாடு முழுவதும் நிகழாண்டுக்கான நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 345 மாணவா்கள் (71 மாணவா்கள், 274 மாணவிகள்) உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 688 மாணவா்கள் நீட் தோ்வை எழுதவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.