மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா எனும் புலிக்கூத்து திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரித்திருவிழாவில் பங்கேற்றோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:55 pm

பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா எனும் புலிக்கூத்து திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, நகரப்பட்டி, வடக்கிபட்டி, சுப்புராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சாா்ந்த பக்தா்கள் புலி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் பூண்டும், குதிரை எடுத்து ஊா்வலமாக வந்து மறவாமதுரை ஒலியநாயகி அம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டனா்.

அதுபோல அம்மன்குறிச்சியில் நடைபெற்ற பாரித்திருவிழாவில் புலி வேடம் மற்றும் பல்வேறு வேடங்கள் பூண்டும், அம்மனை வழிபட்டனா். விழாவில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, அம்மாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.