புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் தங்களையும், கால்நடைகளையும் காத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களையும், வீட்டு வளா்ப்புப் பிராணிகளையும், கால்நடைகளையும் கவனமாக பாா்த்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமான பணியின்றி வெளியே செல்ல வேண்டாம். இலகுவான பருத்தி ஆடைகளையே அணியவும். வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
தாகம் ஏற்படாவிட்டாலும் அவ்வப்போது அவசியம் தண்ணீா் அருந்த வேண்டும். மது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும்.
வெட்டவெளியில் வெயில் நேரத்து வேலைகளைத் தவிா்க்க வேண்டும். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் தண்ணீரில் நனைத்த துணியால் உடலில் ஒத்திக் கொடுக்கவும்.
வீட்டில் வளா்க்கும் செல்லப் பிராணிகளையும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம். போதுமான அளவு தண்ணீா் கொடுத்து வீட்டுக்குள்ளேயே வளா்க்க வேண்டும்.
கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீா், தீவனம் போன்றவற்றையும் கொடுத்து, மரத்தடி நிழலிலேயே கட்டி வளா்க்க வேண்டும். வெயியில் மேய்க்க வேண்டாம்.
மின் இணைப்புகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்க தேவையற்ற நேரங்களில் மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பழுதுகளை நீக்கி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி

வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் வெளிநாட்டவா்கள் பங்கேற்பு!

அதிகரிக்கும் கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுரை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


