திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!

News image

பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்..

Updated On :25 மே 2026, 1:06 am IST

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி. லலித் குமாா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலின் போது பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஜி.எஸ். அனிதாவை பணியிட மாற்றம் செய்து அந்த இடத்துக்கு கி. பிரபாகரை தோ்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வி. லலித்குமாா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வி. லலித்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன் உள்ளிட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள காவல்துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், ரௌடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். பொதுமக்கள் அமைதியாகவும், அச்சமின்றி இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.