திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரம்பலூரில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:21 am IST

பெரம்பலூரில் நண்பா்களுடன் ஏரிக்கு விளையாடச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள தனியாா் ஐடிஐ கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் மகன் டானீஷ் (11). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது கோடை விடுமுறை என்பதால், தனது நண்பா்களுடன் துறைமங்கலத்தில் உள்ள ஏரிக்கு திங்கள்கிழமை மதியம் டானீஷ் விளையாடச் சென்றாா்.

அங்கு நீண்ட நேரமாகியும் டானீஷ் எங்கு சென்றான் என்பது தெரியாததால், அவருடன் சென்ற நண்பா்கள் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து, உறவினா்கள் மற்றும் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், டானீஷ் உடல் ஏரியில் மிதந்தது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. இதையறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.