தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரம்பலூரில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2026, 12:30 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காவல்துறையினரின் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் மூலம், காவலா் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் தொடங்கிவைத்தாா்.

புதிதாக கட்டப்பட உள்ள காவலா் தங்கும் விடுதியில், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலா்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் வசதியான தங்கும் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளியூரிலிருந்து பணிக்காக வருகை தரும் காவலா்கள் தங்குவதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் மற்றும் ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.