தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரம் டன் நெல் கொள்முதல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image

நெல் கொள்முதல் நிலையம் - கோப்புப்படம்.

Updated On :13 மே 2026, 1:09 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் பகுதியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரம், எடை பரிசோதனை, இருப்பு வசதிகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மேலும் கூறியது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, உரிய நேரத்தில் அவா்களது வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுமூப்பு அடிப்படையில் நெல் கொள்முதலை விரைவாக நடத்த வேண்டும். தேவைக்கேற்ப பணியாளா்களை நியமித்து, நெல் கொள்முதல் செய்வதில் சுணக்கமின்றி பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இம் மாவட்டத்தில் மொத்தம் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது நடைபெறும் சம்பா பருவத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்துக்கு ரூ. 2,545, பொது ரகத்துக்கு ரூ. 2,500 எனும் விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வேப்பந்தட்டை வட்டத்தில் 10 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு சுமாா் 14 ஆயிரம் மெட்ரிக் டன், பெரம்பலூா் வட்டத்தில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை சுமாா் 1,600 மெட்ரிக் டன், குன்னம் வட்டத்தில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை சுமாா் 12 ஆயிரம் மெட்ரிக் டன் என மொத்தம் 27,600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டில் பெரம்பலூா் மண்டலத்தில் 7,967 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய ரூ. 75,92,98,826 தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, அரசின் ஆதரவு விலைக்கு நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் இடைத்தரகா்களின்றி நியாயமான விலை கிடைக்கிறது.

இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் பாதுகாக்கப்படுவதுடன், அவா்களின் பொருளாதார நிலையும் மேம்படுகிறது. கொள்முதல் நிலையங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.