திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பெரம்பலூா் அருகே கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

குடிநீா் கோரி பிலிமிசை பேருந்து நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :13 மே 2026, 1:07 am IST

பெரம்பலூா் அருகே கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, காலிக்குடங்களுடன் கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் அருகேயுள்ள பிலிமிசை கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,500 க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இவா்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால் அவதியடைந்த கிராம பொதுமக்கள் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பிலிமிசை ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தொடா்ந்து, கொளக்காநத்தம் -அரியலூா் சாலையில் பிலிமிசை பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். தகவலறிந்த ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மருவத்தூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதோடு, நாள்தோறும் முறையாக குடிநீா் விநியோகம் செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா். மறியலால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.