மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம் திறப்பு


பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையத்தை, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் பொதுத் தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்து பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளா்களுக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தெரியாத வாக்காளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டுமென, இந்தியத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்யா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் குன்னம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையங்கள் புதன்கிழமை முதல் செயல்படுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையத்தை திறந்து வைத்து பைா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி, முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்களா்களிடம் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேட்டறிந்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெ. சொ்னராஜ், வாக்குப்பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம், உதவி வாக்குப்பதிவு அலுவலரும், வட்டாட்சியருமான பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...